தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு + "||" + Corona recovery rate in India rises to 62.93%

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,674 ஆக உயர்வடைந்து உள்ளது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,92,258 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,235 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,620 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதனால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,362 கூடுதலாக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாளொன்றுக்கு 2.8 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இந்தியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது கடந்த 7ந்தேதி 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்த விகிதம் கடந்த 8ந்தேதி 61.53% ஆகவும், கடந்த 9ந்தேதி 62.09% ஆகவும் உயர்ந்திருந்தது.  இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக இன்று உயர்வடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பு, 6 வாரங்களில் இரட்டிப்பு ஆகி உள்ளது.
2. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு
அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
3. அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% குறைவு; அதிபர் டிரம்ப் பேட்டி
அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% அளவிற்கு குறைந்துள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
4. நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.