கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு


கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 July 2020 10:24 PM IST (Updated: 13 July 2020 10:24 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இன்று கொரோனாவுக்கு மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களளூரு,

கர்நாடகா கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி விழிபிதுங்கி வருகிறது. மாநிலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 2,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 41,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மேலும் 73 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 761 ஆக உயந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 839 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,248 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 24,572 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Next Story