மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 213 பேர் பலி


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 213 பேர் பலி
x
தினத்தந்தி 14 July 2020 4:35 PM GMT (Updated: 14 July 2020 4:35 PM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு இன்று ஒரே நாளில் 213 பேர் பலியாகி உள்ளனர்.

புனே,

நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.  இதனால், மராட்டியத்தின் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று முதல் வருகிற 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  கொரோனா பாதிப்புகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு நேற்று 193 பேர் உயிரிழந்தனர்.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 482 ஆக உயர்ந்தது.  6,497 புதிய பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்து 924 ஆக உயர்ந்தது.

4,182 பேர் இன்று குணமடைந்தனர்.  இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 507 ஆக உயர்ந்தது.  தொடர்ந்து, 1 லட்சத்து 5 ஆயிரத்து 637 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

இந்த நிலையில், மராட்டிய சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகளுக்கு இன்று ஒரே நாளில் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,482ல் இருந்து 10,695 ஆக உயர்ந்துள்ளது.  6,741 புதிய பாதிப்புகள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,60,924ல் இருந்து 2,67,665 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியத்தில் இன்று 4,500 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ல் இருந்து 1,49,007 ஆக உயர்ந்துள்ளது.  தொடர்ந்து, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,05,637ல் இருந்து 1,07,665 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story