நான் பாஜகவில் இணையமாட்டேன். காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன் - சச்சின் பைலட்
நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன் என சச்சின் பைலட் கூறி உள்ளார்.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகாரப் போட்டியால் மோதல் வெடித்தது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது. மாநில கல்வித்துறை இணையமைச்சரான கோவிந்த் சிங் ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரை, அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு, முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்த பரிந்துரையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சச்சின் பைலட் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், உண்மை ஒரு போதும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை சச்சின் பைலட்டும் தமது அடுத்த கட்ட முடிவை அறிவிக்க உள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
சச்சின் பைலட்கூறியதாவது:-
நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன்.நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேர எனக்கு எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னை பாஜகவுடன் இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுபடுத்த வைக்க முயற்சியாகும் என்று கூறினார்.
Related Tags :
Next Story