கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது: பினராயி விஜயன் ஒப்புதல்


கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது:  பினராயி விஜயன் ஒப்புதல்
x
தினத்தந்தி 17 July 2020 7:45 PM IST (Updated: 17 July 2020 7:45 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரளாவில்  இன்று ஒருநாளில் மட்டும் 791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் இதுவரை பதிவான  அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், “கேரளாவில் சில இடங்களில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக கூறினார். பினராயி விஜயன் கூறுகையில், “  திருவனந்தபுரத்தின் பூந்துரா மற்றும் புல்லுவிலா ஆகிய கடற்கரை பகுதிகளில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது” என்றார். 

Next Story