மும்பை தாராவியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று
மும்பை தாராவியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும்பாலான நாட்கள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது.
இந்தநிலையில் நேற்று அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அதன்படி புதிதாக 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2-வது நாளாக இன்றும் இரட்டை இலக்க எண்களில் கொரோனா தொற்று தாராவியில் பதிவாகியிருக்கிறது.

தாராவியில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாராவியில் இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,438 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,087 பேர் குணமடைந்துள்ள நிலையில், 102 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story