ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு- காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
புதுடெல்லி
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர்வாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை கொன்றதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். அதில் ஜெய்ஷ்-இ-முகமது தளபதி ஒருவர் இருப்பதாக நம்பப்படுகிறது.
ஜூன் மாதத்தில் பள்ளத்தாக்கில் நடந்த பல்வேறு மோதல்களில் பாதுகாப்புப் படையினர் 48 பயங்கரவாதிகளைக் கொன்றனர், அவர்களில் பெரும்பாலோர் தெற்கு காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.
Related Tags :
Next Story