எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது- ராகுல்காந்தி


எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது- ராகுல்காந்தி
x
தினத்தந்தி 18 July 2020 1:20 PM IST (Updated: 18 July 2020 1:20 PM IST)
t-max-icont-min-icon

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது என பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

கோவை சுந்தராபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுஅதிகாலை அந்தச் சிலை மீது காவி நிறச் சாயம் பூசப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அங்கு திரண்டனர். காவல்துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். சிலையில் இருந்த காவி நிறச் சாயம் அழிக்கப்பட்டு, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த செயலுக்குபல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நேற்று பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்ற இளைஞர் இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், "எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது" என தமிழில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.



Next Story