சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்-வாகனங்களுக்கு தீ வைப்பு


சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்-வாகனங்களுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 19 July 2020 8:37 PM IST (Updated: 19 July 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் சோப்ரா என்ற பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரம் மாற்றும் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது  கொல்கத்தாவில் இருந்து சில்குரியை இணைக்கு தேசிய நெடுஞ்சாலையை மறித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால், அந்த இடம் களேபரம் ஆனது.  

இதையடுத்து விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீஸ் வாகனங்களும் தீ வைக்கப்பட்டன. உடனே கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தண்னீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்டியடித்தனர்.

 இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. தற்போது நிலமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த உள்ளூர் போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர். 

Next Story