மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 July 2020 9:10 PM IST (Updated: 19 July 2020 9:10 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இதுவரை இல்லாத ஒரே நாளில் 9,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,
 
பெருந்தொற்று நோயான கொரோனா மராட்டியத்தை உலுக்கி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மராட்டிய மாநிலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அதற்கு இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில்  9,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 258 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,455 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,854 ஆக  உயர்ந்துள்ளது.

Next Story