வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு உதவ பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 20 July 2020 4:00 AM IST (Updated: 20 July 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்கு மத்திய அரசு உதவும் என்று அம்மாநில முதல்-மந்திரியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலமான அசாமில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. விவசாய பயிர்களும் நாசம் அடைந்துள்ளன. வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் 81 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அவரிடம், மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சோனோவால் எடுத்துரைத்தார்.

அனைத்தையும் கேட்ட பிரதமர் மோடி, வெள்ள நிலைமையை சமாளிக்க அசாமுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.

மேலும், அசாமில் கொரோனா பாதிப்பு நிலவரத்தையும் மோடி கேட்டறிந்தார். அதற்கு சோனோவால், சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 53 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறினார்.

அசாமில் உள்ள பாக்ஜன் எண்ணெய் கிணற்றில் இருந்து கடந்த 54 நாட்களாக எரிவாயு வெளியாகி வருவது பற்றியும், அதை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் மோடி விசாரித்தார்.

இத்ததகவலை அசாம் முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 More update

Next Story