கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரெயில் பெட்டிகளுக்கு தலா ரூ.3 லட்சம் செலவிடும் ரெயில்வே ஏ.சி. பெட்டிகளுக்கு இரு மடங்கு செலவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரெயில் பெட்டிகளுக்கு தலா ரூ.3 லட்சம் செலவிடும் ரெயில்வே ஏ.சி. பெட்டிகளுக்கு இரு மடங்கு செலவு
x
தினத்தந்தி 22 July 2020 5:44 AM IST (Updated: 22 July 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரெயில் பெட்டிகளுக்கு தலா ரூ.3 லட்சம் செலவிடும் ரெயில்வே ஏ.சி. பெட்டிகளுக்கு இரு மடங்கு செலவு

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் குறைவான ரெயில்களும், சில சிறப்பு ரெயில்களும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த கொரோனா காலம் மற்றும் அதைத்தொடர்ந்து வரும் நாட்களிலும், ரெயில்களில் நோய்த்தொற்று பரவாமல் பயணிகளை பாதுகாக்கும் வகையில் ரெயில் பெட்டிகளை மாற்றியமைக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப்பின் கபுர்தலாவில் உள்ள ரெயில்பெட்டி தொழிற்சாலையில் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி ரெயில் பெட்டிகளில் காலால் இயக்கும் கைகழுவும் எந்திரம், நவீன கழிவறை கருவிகள், முழங்கையால் திறக்கப்படும் கதவுகள், செம்பு முலாம் பூசப்பட்ட கைப்பிடிகள் போன்றவை அமைக்கப்படுகின்றன. மேலும் டைட்டானியம் டை ஆக்சைடு முலாம் பூசப்பட்ட பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஏ.சி. பெட்டிகளில் காற்றை சுத்திகரிக்க பிளாஸ்மா கருவி போன்றவையும் இணைக்கப்படுகின்றன. இந்த பணிகளுக்காக சாதாரண பெட்டிகளுக்கு தலா ரூ.3 லட்சம் வரையும், ஏ.சி. பெட்டிகளுக்கு தலா ரூ.6 லட்சம் வரையும் செலாவவதாக ரெயில் பெட்டி தொழிற்சாலை பொது மேலாளர் ரவிந்தர் குப்தா கூறியுள்ளார். இந்த வசதிகள் கொண்ட 2 பெட்டிகள் தயாரித்து ரெயில்வேயின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறிய அவர், இந்த செலவினங்களை குறைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

1 More update

Next Story