உத்தரகாண்டில் நிலச்சரிவு; 6 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்டில் நிலச்சரிவில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
டேராடூன்,
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. உத்தரகாண்டின் பித்தோரகர் மாவட்டத்தில் தங்கா கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
இதில் அந்த பகுதியில் இருந்தவர்களில் சிலர் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர்.
அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டு இதுவரை 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 11 பேரை காணவில்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களை தொடர்ந்து தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக பித்தோரகர், அஸ்கோட் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் அவர்கள் 3 குழுக்களாக சென்று தேடுதல் பணி நடந்து வருகிறது. இதேபோன்று மோப்பநாய் குழு ஒன்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளது.
Related Tags :
Next Story