இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம் பொற்காலம் - ப.சிதம்பரம் கருத்து


இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம் பொற்காலம் - ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 23 July 2020 2:28 PM IST (Updated: 23 July 2020 2:28 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லி,

இந்திய பொருளாதாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது;-

“உண்மைகளை சிந்திக்க மறுக்கும் பா.ஜ.க. நண்பர்களே, கடந்த 2009-2014 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், 2014-2019 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இடையிலான பொருளாதார செயல்பாடுகளை பாருங்கள்” என ஒரு பட்டியலை தமது பதிவில் இணைத்துள்ளார். இரண்டு ஆட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. நண்பர்களுக்கு உண்மை தெரியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story