தெலுங்கானாவில் கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது: சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
தெலுங்கானாவில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலைக்கு சென்று விட்டது எனவும் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தெலுங்கானா பொது சுகாதார இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், “ தெலுங்கானாவில் கொரோனா சமூக பரவல் நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, அடுத்த 4 முதல் 5 வாரங்களுக்கு மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.
கொரோன தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையையும் அரசு எடுத்து வருகிறது. மக்கள் கைகளை கழுவுதல், இடைவெளி விட்டு இருத்தல் ஆகியவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
தெலுங்கானாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, 50,826 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story