இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 25 July 2020 9:58 AM IST (Updated: 25 July 2020 9:58 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை தவிர, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் பலர் கொரோனாவால் புதிதாக பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945லிருந்து 13,36,861ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209லிருந்து 8,49,432ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601லிருந்து 31,358ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 757 பேர் உயிரிழந்தனர். சிகிச்சை பெறுவோர் - 4.56 லட்சம், குணமடைந்தோர் - 8.49 லட்சம் பேர். இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டியது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story