மராட்டிய மாநிலத்தில் பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை ஒப்புதல்


மராட்டிய மாநிலத்தில் பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை ஒப்புதல்
x
தினத்தந்தி 25 July 2020 8:44 PM IST (Updated: 25 July 2020 8:44 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் பள்ளிப் பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மராட்டிய மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மராட்டிய மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story