ஆந்திர மாநிலத்தில் மேலும் 7,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 7,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7,813 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 88,671 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 52 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 985 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,208 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தம் 43,255 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆந்திர மாநிலத்தில் 44,431 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story