கவர்னர் மாளிகையில் தர்ணா: அசோக் கெலாட்டுக்கு மத்திய மந்திரி கண்டனம்
கவர்னர் மாளிகையில் தர்ணாவில் ஈடுபட்ட முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு மத்திய மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராஜஸ்தானில் சட்டசபையை கூட்டக்கோரி முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு மத்திய மந்திரி ஷெகாவத் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘முதல்-மந்திரியே கவர்னரை மிரட்டி, அவருக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கொள்ளை, வன்முறை, கற்பழிப்பு, கொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ராஜஸ்தான் மக்கள் அந்த முதல்-மந்திரியிடம் தங்கள் பாதுகாப்பை வேண்டுவது பயனற்றது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயன்றதாக ஷெகாவத் மீது காங்கிரசார் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர் முதல்-மந்திரி மீது இந்த கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story