கார்கில் போர் வெற்றியின் 21-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை


கார்கில் போர் வெற்றியின் 21-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு போர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை
x
தினத்தந்தி 26 July 2020 4:40 AM GMT (Updated: 26 July 2020 4:40 AM GMT)

கார்கில் போர் வெற்றியின் 21-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

கடந்த 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் கார்கில் போர் வெற்றியின் 21-ஆவது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். பாதுகாப்புத் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

இந்த கார்கில் வெற்றி பாகிஸ்தானில் மட்டும் இந்தியாவின் வலிமையை பறைசாற்றவில்லை. மொத்த உலநாடுகளுக்கும் இந்தியாவின் வலிமை அப்போது தான் தெரிந்தது. முக்கியமாக ஆசிய கண்டத்தில் இந்தியா முக்கியமான நாடாக மாறியது.


Next Story