கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா


கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை மிஞ்சியது இந்தியா
x
தினத்தந்தி 31 July 2020 9:34 PM GMT (Updated: 31 July 2020 9:34 PM GMT)

கொரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலி நாட்டை இந்தியா மிஞ்சியது.

புதுடெல்லி,

கொரோனா நோய் பரவல் இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது. 16 லட்சத்து 38 ஆயிரத்து 870 பேர் மேற்பட்டோர் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். உலகில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் உள்ளது.

நோய்தொற்று அதிகரிப்பதை போல நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 78 ஆயிரத்து 98 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதில் அமெரிக்காவில் 1.5 லட்சம் பேரும், பிரேசிலில் 91 ஆயிரம் பேரும், மெக்சிகோ மற்றும் இங்கிலாந்தில் ஏறக்குறைய தலா 46 ஆயிரம் பேரும் பலியாகி இருக்கிறார்கள்.

அடுத்தபடியாக அதிகம் பேர் இறந்தது இத்தாலியில் தான். அங்கு 35 ஆயிரத்து 132 பேர் பலியாகி இருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கையையும் இந்தியா நேற்று தாண்டியது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 779 பேர் இறந்துள்ளனர். எனவே மொத்த பலி எண்ணிக்கை 35 ஆயிரத்து 700-ஐ கடந்துவிட்டது. இதனால் இத்தாலியை மிஞ்சி, உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

Next Story