மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 232 போலீசாருக்கு கொரோனா தொற்று


மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 232 போலீசாருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Aug 2020 12:34 PM IST (Updated: 1 Aug 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 232 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.  மராட்டிய மாநிலத்தில் 1,50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றும் காவல்துறையினரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 232 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இதுவரை 9449 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 7,414 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நிலையில், 1,932 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கொரோனா பாதிப்பால் மராட்டிய காவல்துறையைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story