தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + A further 962 people in Kerala are affected by corona today

கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று வரை 18 லட்சத்து 30 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,485 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடமும், தமிழகம், ஆந்திரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தற்போது கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 867 ஆக உயர்ந்து உள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 55 பேர் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள், 85 பேர் வெளி மாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சியோர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 815 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று 2 பேர் உயிரிழந்தநிலையில், கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 7,354 பேருக்கு கொரோனா தொற்று - முதல்வர் பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 7,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று மருத்துவ அவசரநிலையை அறிவிக்க கோரிக்கை
கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
3. கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை சரமாரியாக தாக்கிய பெண்கள்
கேரளாவில் பெண்களை அவமதித்து யூட்யூப் சேனல் நடத்தியவரை நேரில் சென்று சரமாரியாக தாக்கிய பெண்கள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த நேரிடும்: சுகாதாரத்துறை மந்திரி எச்சரிக்கை
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...