இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Aug 2020 9:43 AM IST (Updated: 4 Aug 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,050  -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 803-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  18,55,746  ஆக உள்ளது.

அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  38938 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,86,298-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,30,510-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.   இந்தியாவில்  2,08,64,750-  பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும்   6,61,182 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
1 More update

Next Story