உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கொரோனா பாதிப்பு என்பது வதந்தி


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கொரோனா பாதிப்பு என்பது வதந்தி
x
தினத்தந்தி 5 Aug 2020 2:36 PM IST (Updated: 10 Aug 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு கொரோனா பாதிப்பு வதந்தி என்று தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தகவல் வெளியானநிலையில், தற்போது அது வதந்தி என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story