நிர்பயா போன்ற சம்பவம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கத்தரிக்கோலால் குத்தப்பட்டார்


நிர்பயா போன்ற சம்பவம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கத்தரிக்கோலால் குத்தப்பட்டார்
x
தினத்தந்தி 7 Aug 2020 10:03 AM GMT (Updated: 7 Aug 2020 10:03 AM GMT)

நிர்பயா போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து பலமுறை கத்தரிக்கோலால் குத்தப்பட்டார்.

புதுடெல்லி: 

2012 ல் நிர்பயா பாலியல் வன்முறை மற்றும்  கொலை வழக்கிற்குப் பிறகு டெல்லி 12 வயது சிறுமி ஒருவர்  பாலியல் பலாத்காரத்தை எதிர்த்ததை அடுத்து இதேபோன்ற கொடுமைக்கு ஆளாகி உள்ளார். இதனால் நாட்டின் தலைநகருக்கு மீண்டும் தலைக்குனிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த கொடூரமான சம்பவம் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில கடந்த வியாழக்கிழமை நடந்து உள்ளது. பாலியல் பலாத்காரத்தில்  சிறுமி  கத்தரிக்கோலால் பல முறை குத்தப்பட்டு உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சிறுமியின் தனிப்பட்ட பாகங்கள் மற்றும் குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு உள்ளன.

சிறுமி இப்போது புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) உயிருக்கு போராடி வருகிறார். சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சமபவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் வியாழக்கிழமை மாலை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தி நாளேடான நவபாரத் டைம்ஸ்  அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் உடலில் கீறல் அடையாலங்கள்  இருந்ததாக போலீசார் கூறுகின்றனர், இது சிறுமி பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் போதைக்கு அடிமையானவர் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் பல கிரிமினல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்துள்ளார். சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து, சுமார் 100 சந்தேக நபர்களை விசாரித்து உள்ளனர்.

Next Story