கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்: நிபுணர்கள் கணிப்பு


கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம்: நிபுணர்கள் கணிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 1:45 AM IST (Updated: 12 Aug 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானிகளின் தவறான முடிவும் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி, 

துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கடந்த 7-ந்தேதி கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. இதில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் விமான விபத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்தவகையில் மழை, பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களை அவர்கள் கூறியுள்ளனர்.

இதைவிட முக்கியமாக விமானிகளின் தவறான முடிவும் இந்த விபத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் கூறினர். குறிப்பாக பலத்த மழை காரணமாக முதல் முயற்சியில் விமானத்தை தரையிறக்க முடியாதபோது, விமானத்தை மற்றொரு விமான நிலையத்துக்கு திருப்பாதது விமானிகளின் தவறு என அவர்கள் கூறியுள்ளனர்.

ஈரமான ஓடுபாதையில் தரையிறக்கியதன் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு இதேப்போன்ற விபத்து ஒன்று நடந்திருக்கும் நிலையில், மீண்டும் அதைப்போல ஒரு முடிவு எடுத்தது முட்டாள்தனமானது என சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன் கூறியுள்ளார்.

1 More update

Next Story