தனியார் - பொது பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தனியார் - பொது பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமியில் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய வேலை வாய்ப்பு அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.மத்திய அரசு பணிகளின் தகுதி தேர்வு இந்த அமைப்பின் மூலம் நடத்தப்படும்.
தனியார் - பொது பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தனியார் மயமாகும் ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம், அசாம் கவுகாத்தி விமான நிலையங்கள் தனியார் மற்றும் பொது பங்களிப்புடன் இயங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
TANGEDCO போன்ற மின்சார விநியோக அமைப்புகளுக்கு கூடுதல் கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story