விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


விநாயகர் சதுர்த்தி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 21 Aug 2020 4:09 PM GMT (Updated: 21 Aug 2020 4:11 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ 'விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தற்போது கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தத் தொற்றுநோயை விரைவாக சமாளித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, விநாயகர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். 

விநாயகர் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திப் பண்டிகை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Next Story