ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரிடம் இருந்து கைபற்றப்பட்ட குக்கர் வெடிகுண்டு செயலிழப்பு


ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரிடம் இருந்து கைபற்றப்பட்ட குக்கர் வெடிகுண்டு செயலிழப்பு
x
தினத்தந்தி 22 Aug 2020 2:03 PM IST (Updated: 22 Aug 2020 2:03 PM IST)
t-max-icont-min-icon

தலைநகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுஇருந்த ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் குக்கர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி: 

பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நடத்திய  சோதனையில், நேற்றிரவு டெல்லியில் தவ்லா குஉவான் பகுதியில் ஐஎஸ் அமிப்பின் செயற்பாட்டாளரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்தது.

இவர் உத்தரப்பிரதேசத்த்தை சேர்ந்த அப்துல் யூசுப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தவுலா குவான் மற்றும் கரோல் பாக் இடையே ரிட்ஜ் சாலை அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போலீசார் ஒரு துப்பாக்கியையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

ஏறக்குறைய 15 கிலோகிராம் எடையுள்ள இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் (ஐ.இ.டி) பயங்கரவாதியிடமிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. கான் தனது டி.வி.எஸ் அப்பாச்சி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து உள்ளனர்.

வெடிமருந்து பிரஷர் குக்கரில் காணப்பட்டன. எடை இன்னும் தெளிவாக இல்லை ... விசாரணையின் பின்னர் அது உறுதி செய்யப்படும் ”என்று டெல்லி காவல்துறை கூறி உள்ளது

 ரிட்ஜ் சாலை பகுதியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்கா அருகே பாதுகாப்புப் படையினர்  வெடிகுண்டை செ. ஆபரேட்டர் செயல் இழக்க செய்தனர்.

ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து முழுப் பகுதியையும் தேசிய பாதுகாப்புக் காவலர்கள் சோதனையில் ஈடுப்படு உள்ளனர். மோப்ப  நாய்களைகொண்டும் சோதனை நடைபெறுகிறது.

கான் ஐஎஸ் அமைப்பின் தனி உல்ப் என அழைக்கப்படும் செயல்பாட்டாளர் என்று போலீசார் கூறுகின்றனர், அவர் டெல்லியில் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தார்.

1 More update

Next Story