வலுவான தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சிதான் நாட்டை காப்பாற்றும் : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்


வலுவான தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சிதான்   நாட்டை காப்பாற்றும் : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்
x
தினத்தந்தி 23 Aug 2020 2:25 PM GMT (Updated: 23 Aug 2020 2:49 PM GMT)

பாஜகவை தோற்கடிக்க இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரி என்று பஞ்சாப் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரஸ், 

வலுவான தலைமை கொண்ட காங்கிரஸ் கட்சியாலே நாட்டை காப்பாற்ற முடியும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அமரீந்தர் சிங் கூறுகையில், “  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்குக்காரணம் ஒருங்கிணைந்த வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததே. எனவே இந்த சமயத்தில் தலைமையை மாற்றி கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனை காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல்களையே தோற்றுவிக்கும். 

ஒருங்கிணைந்த வலுவான தலைமையுடைய காங்கிரஸ்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும். காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவையென்னவெனில் சிலர் விரும்பும் தலைவர் அல்ல, பலரும் நாடும் விரும்பும் தலைவர் தேவை. இதற்கு காந்தி குடும்பத்தினர் தலைமைதான் சரியாக இருக்கும். சோனியா காந்தி விரும்பும் வரை கங்கிரஸ் தலைவைராக நீடிக்க வேணடும். அதன்பிறகு ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும். கட்சியை நடத்த அவருக்கு முழுத்திறமை இருக்கிறது” என்றார். 

 பாஜக தோற்கடிக்க   இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரி என்று பஞ்சாப் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story