எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல்- இந்தியா தக்க பதிலடி
x
தினத்தந்தி 24 Aug 2020 9:44 AM GMT (Updated: 24 Aug 2020 9:44 AM GMT)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

ஸ்ரீநகர், 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், பாகிஸ்தான் திருந்தியபாடில்லை. 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பேனி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள்., மோர்ட்டார்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 


Next Story