அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி


அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Aug 2020 7:38 PM IST (Updated: 24 Aug 2020 7:38 PM IST)
t-max-icont-min-icon

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகார்,

இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.கொரோனா பாதிப்புக்கு அனைத்து தரப்பு மக்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க் கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

இந்த நிலையில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் இன்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டேன். சோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த வாரம் தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் பரிசோதனை செய்து கொள்ளவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story