டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்கிறது: பிளாஸ்மா சிகிச்சை குறித்து கெஜ்ரிவால் கருத்து


டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்கிறது: பிளாஸ்மா சிகிச்சை குறித்து கெஜ்ரிவால் கருத்து
x
தினத்தந்தி 24 Aug 2020 4:34 PM GMT (Updated: 24 Aug 2020 4:34 PM GMT)

டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்கிறது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகிரத்து வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அதிபர் ட்ரம்ப் அவசரகால அனுமதி அளித்துள்ளார்.  இது குறித்து டெல்லி கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-   

அமெரிக்கா இன்று செய்வதை இந்தியா நாளை செய்யும் என்ற பேச்சு முன்பு இருந்தது. ஆனால், டெல்லி இதை மாற்றியுள்ளது. டெல்லி நேற்று செய்ததை அமெரிக்கா இன்று செய்துள்ளது. நாட்டிற்காக இந்த சாதனையை செய்த டெல்லி மக்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story