பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் ராணுவ மருத்துவமனை தகவல்


பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் ராணுவ மருத்துவமனை தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2020 2:35 AM IST (Updated: 25 Aug 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்ததை அடுத்து, சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். மூளையில் உறைந்த ரத்தக்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் நிலை மோசமடைந்தது.

அவருக்கு கொரோனா மற்றும் சுவாச தொற்றும் உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையில் இருந்து வருகிறார். அவரது முக்கிய உடல் உறுப்புகள் சீராக உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தொ டர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story