கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார்


கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனாவில் இருந்து மீண்டார்
x
தினத்தந்தி 1 Sept 2020 7:43 AM IST (Updated: 1 Sept 2020 7:43 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வருபவர் டி.கே.சிவக்குமார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டி.கே.சிவக்குமாருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர் ராஜாஜிநகரில் உள்ள சுகுணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இதனால் அவருக்கு கொரோனா தொற்று குறைந்தது.

இதையடுத்து அவருக்கு 2-வது கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் 3-வது முறையாக டி.கே.சிவக்குமாருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானது. இதனால் அவர் கொரோனாவில் இருந்து மீண்டது உறுதியானது. 

இந்த நிலையில் நேற்று சுகுணா மருத்துவமனையில் இருந்து 7 நாட்களுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். இருப்பினும் அவரை வீட்டு தனிமையில் சில நாட்கள் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story