இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 69,921 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று பரவல், இந்தியாவில் கடந்த சில நாட்களாக ‘ஜெட்’ வேகத்தில் இருக்கிறது. பாதிப்பில் உலகில் 3-ம் இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 36,91,167 ஆக உள்ளது
மேலும் 819 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,39,883 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,85,996 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Related Tags :
Next Story