டெல்லியில் இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 1 Sept 2020 8:03 PM IST (Updated: 1 Sept 2020 8:03 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,060 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 18 பேர் உயிரிழந்ததையடுத்து, டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,462 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 15,870 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,56,728 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story