தேசிய செய்திகள்

வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு + "||" + Solicitor General Tushar Mehta said in the Supreme Court that the banking sector is the backbone of our economy, we can't take any decision which can weaken the economy.

வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு

வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு
வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இ.எம்.ஐ தொடர்பான வழக்கில் , வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது  என மத்திய அரசு தெரிவித்துள்ளது.   மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வாதத்தை முன்வைத்தார்.  மேலும்,  வங்கித்துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எனவும்  கொரோனா பொது முடக்கத்தால் ஒவ்வொரு  துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை புனரமைக்க போதிய திட்டங்கள் தேவை என்றும் கூறினார்.  

வழக்கின் முழு விவரம்;

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வங்கிகளில் பெற்ற கடன்களின் மாதத் தவணையை திருப்பி செலுத்த 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது.ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அப்படி வட்டி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த மாதம் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் போதிய அதிகாரம் உள்ள நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை கண்டித்து கோவை மாவட்டத்தில் 14 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
2. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளூர் மக்களே நியமிக்கப்படுவர் என அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும்- காங்கிரஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
4. டெல்லியில் டிராக்டரை எரித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்; பாஜக கடும் விமர்சனம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் - குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பிக்கள் கடிதம்
இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 32 எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.