224 சீன செயலிகள் தடை: இந்தியாவின் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கம்


224 சீன செயலிகள் தடை: இந்தியாவின் டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கம்
x
தினத்தந்தி 4 Sept 2020 7:03 AM IST (Updated: 4 Sept 2020 7:09 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா 224 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது.

புதுடெல்லி,

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளன. கடந்த புதன்கிழமை பப்ஜி, வீசாட், பைடு உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதுவரை மொத்தம் 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன.

சீன தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் இந்த டிஜிட்டல் தாக்குதலால் சீனா கலக்கத்தில் உள்ளது. இதனால் சீன தரப்பு புலம்பி வருகிறது. இதுபற்றி சீன வர்த்தகத்துறை அதிகாரி காவ் பெங் கூறும்போது, “இந்தியா சீன நிறுவனங்கள் மீது பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது உலக வர்த்தக கழகத்தின் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்” என்றார்.

“இருதரப்பு ஒத்துழைப்பையும், வளர்ச்சியையும் பராமரிக்க இந்திய தரப்பு சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் சீன நிறுவனங்கள் உள்ளிட்ட சேவை வழங்குபவர்களுக்கு திறந்த மற்றும் நியாயமான வணிகச் சூழலை உருவாக்க முடியும். இது சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பில் பரஸ்பர நன்மைகளை அளிக்கும்” என்றும் அவர் கூறி உள்ளார்.

Next Story