அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லெட் ரெயில் திட்டம் தாமதம் ஆகும் எனத்தகவல்
மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லெட் ரெயில் திட்டம் தாமதம் ஆகலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் 508.17 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
புல்லட் ரெயில் திட்டப்பணிகளை தேசிய அதிவேக ரெயில் கழகம் மேற்கொள்கிறது. டிசம்பர் 2023-ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக நிலம் கையகப்படுத்தலுக்கான டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நிர்ணையிக்கப்பட்ட இலக்கு காலத்திற்குள் புல்லெட் ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான 63 சதவித நிலங்கள் ஏற்கனவே கையகபடுத்தப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story