மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு


மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்யலாம்: மத்திய அரசு
x
தினத்தந்தி 5 Sept 2020 1:23 PM IST (Updated: 5 Sept 2020 1:23 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்யலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் , பயணிப்பவர்கள் என தேவைப்படுபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைசகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல் 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story