வடக்கு சிக்கிமில் வழி தவறி சிக்கி தவித்த சீன குடிமக்களை இந்திய இராணுவம் மீட்டது.


வடக்கு சிக்கிமில் வழி தவறி சிக்கி தவித்த சீன குடிமக்களை இந்திய இராணுவம் மீட்டது.
x
தினத்தந்தி 5 Sept 2020 4:03 PM IST (Updated: 5 Sept 2020 4:26 PM IST)
t-max-icont-min-icon

வடக்கு சிக்கிமில் வழி தவறி சிக்கி தவித்த சீன குடிமக்களை இந்திய இராணுவம் மீட்டுள்ளது. அதற்கு அவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி

சீனா இந்தியாவின் எல்லையை சுற்றிலும் தொல்லை கொடுத்து வருகிறது.ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் இரவு கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் த்சோவின் தென் கரையில் சீனாவின்  இராணுவம் ஊடுருவ முயற்சித்தது இதனை இந்திய இராணுவம் முறியடித்தது.இதனை தொடர்ந்து இந்த வாரம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.

நேபாள எல்லையில் சீன நிதி உதவி அளித்து இந்தியாவுக்கு எதிராக நேபாள அமைப்புகளை போராட தூண்டி வருகிறது.

ஆனால் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் வடக்கு சிக்கிமில் வழி தவறி சிக்கி தவித்த சீன குடிமக்களை இந்திய இராணுவம் மீட்டுள்ளது.

2020 செப்டம்பர் 03 அன்று வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் வழி தவறிய மூன்று சீன மக்களை இந்திய ராணுவம் உதவி செய்து மீட்டுள்ளது. பூஜ்ஜிய வெப்பநிலையில் வழி தவறி சிக்கி தவித்த இரண்டு ஆண்கள் ஒரு பெண் என 3 சீன குடிமக்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததை உணர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்து ஆக்ஸிஜன், உணவு மற்றும் உடைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.

மேலும், வழி தவறிய அவர்களுக்கு இந்திய படைகள் சரியான வழிகாட்டுதல்களை வழங்கியதையடுத்த அவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். சீன குடிமக்கள் இந்தியாவுக்கும் இந்திய ராணுவத்துக்கும் உடனடி உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story