தெலுங்கானா நிதி-மந்திரி ஹரீஷ் ராவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
தெலுங்கானா நிதி-மந்திரி ஹரீஷ் ராவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்,
தெலுங்கானா நிதி-மந்திரி ஹரீஷ் ராவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பரிசோதனை செய்தேன். அதில், கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. ஆனால் என் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்புகொண்ட அனைவரும், தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா சோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மருமகன் ஹரிஷ் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story