உத்தரகாண்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்கு


உத்தரகாண்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்கு
x
தினத்தந்தி 8 Sept 2020 1:15 AM IST (Updated: 8 Sept 2020 12:42 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டேராடூன், 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தவார்கட் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மகேஷ் நெகி. இவர் மீது போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு கற்பழிப்பு புகார் கொடுத்து உள்ளார். அதில், தனது மகளுக்கு அவர் தான் தந்தை என பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார். உள்ளூர் கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் மகேஷ் நெகி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்தனர். அந்த பெண்ணை மிரட்டியதாக எம்.எல்.ஏ.வின் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை மகேஷ் நெகி எம்.எல்.ஏ. மறுத்து உள்ளார்.

கற்பழிப்பு புகார் தெரிவித்து உள்ள பெண் மீது கடந்த மாதம் மகேஷ் நெகி எம்.எல்.ஏ.வை மிரட்டி ரூ.5 கோடி பறிக்க முயன்றதாக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story