டெல்லியில் அதிகபட்சமாக இன்று மேலும் 4,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் அதிகபட்சமாக இன்று மேலும் 4,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Sept 2020 10:18 PM IST (Updated: 9 Sept 2020 10:18 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் அதிகபட்சமாக இன்று மேலும் 4,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. 

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,039 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,01,174 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,638 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 2,623 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,763 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 23,773 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story