மும்பை மேயர் கிஷோரி பெட்னேகருக்கு கொரோனா தொற்று
மும்பை மேயர் கிஷோரி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மும்பை மேயர் கிஷோரி பெட்னேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், “ நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்ட எனது சக ஊழியர்கள் அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன், நான் விரைவில் மும்பை மக்களுக்கு சேவை செய்யத் தொடங்குவேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
Related Tags :
Next Story