இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின


இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின
x
தினத்தந்தி 13 Sept 2020 6:51 AM IST (Updated: 13 Sept 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

சண்டிகார்,

பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், எல்லை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயல் பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்த இடத்தில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், இந்த ஆயுதங்களை எல்லைப்பகுதியில் மறைத்து வைத்தது யார்?, பயங்கரவாதிகள் யாரும் நாசவேலைக்கு திட்டமிட்டு பதுக்கி வைத்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story