நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று நடைபெற இருக்கிறது
இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மாணவர்கள் இரண்டரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் கொரோனா மற்றும் வெள்ளம் காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு அனுதாபங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story