மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளில் ரூ.270 கோடி மோசடி நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றச்சாட்டு
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகள் மூலம் ரூ.270 கோடி மோசடி நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களுக்கும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.270 கோடி மோசடி நடந்து உள்ளதாக சட்டமேலவை எதிர்கட்சி தலைவர் பிரவின் தரேக்கர் (பா.ஜனதா) குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா சோதனைக்கு ரூ.1, 700 கட்டணமாக நிர்ணயித்தது. ஆனால் மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்ய ரூ.1,900 முதல் ரூ.2,200 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.795 என மத்திய அரசு நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் மராட்டிய தனியார் ஆய்வகங்களில் ரூ.1,256 வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா சோதனை விவகாரத்தில் ரூ.270 கோடி வரை மோசடி நடந்து உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Related Tags :
Next Story